இமாச்சலபிரதேச மாநிலத்தில் தொடர் கனமழையால் இதுவரை 60 பேர் உயிரிழந்திருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிம்லா மாவட்டத்தில் உள்ள மலைப் பகுதியில் திடீரென பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அங்கிருந்த வீடுகள் சரிந்து விழுந்தன. நிலச்சரிவின் காரணமாக மலைப் பகுதியில் இருந்த அடுக்குமாடி வீடுகள் இடிந்து விழும் வீடியோ இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் கட்டடம் அருகில் இருந்த மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் உள்ளிட்டவை நொறுங்கி விழுந்தன. வீடுகள் இடிந்து விழும்போது மக்களின் அலறல் சத்தம் கேட்டது பெரும் பரிதாபகரமாக காட்சி அளித்தது. நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

Comments are closed, but trackbacks and pingbacks are open.