திருச்சி மாநகர் மாவட்ட ஜங்ஷன் கோட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் 77-வது சுதந்திர தின விழா பீமநகரில் நேற்று ( 15.08.2023 ) நடைபெற்றது. விழாவிற்கு ஜங்ஷன் கோட்ட தலைவர் பிரியங்கா பட்டேல் தலைமை தாங்கினார். 51-வது வார்டு தலைவர் என். கண்ணன் வரவேற்றார். மாவட்ட தலைவர் வி.ஜவஹர், மாநில பொதுச்செயலாளர் வழக்கறிஞா் எம்.சரவணன், முன்னாள் மாவட்ட தலைவர் ஜி.ஜெரோம் ஆரோக்கியராஜ், மாநகராட்சி கவுன்சிலர் மற்றும் ஓ.பி.சி. மாவட்டத் தலைவர் எல்.டெக்ஸ், மாநில துணைத்தலைவர் சுப.சோமு, மாவட்ட பொருளாளர் ராஜா நசீர், மாவட்ட பொதுச் செயலாளர் ஆடிட்டர் என்.சுரேஷ் மற்றும் இளைஞர் காங்கிரஸின் மாவட்ட தலைவர் ரமேஷ் சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.விழாவில் கலந்து கொண்ட மாநில பொதுச்செயலாளர் வழக்கறிஞா் எம்.சரவணன் பேசுகையில், “பாராளுமன்றத்தில் அதானியை பற்றி கேள்வி எழுப்பியதால், மோடி குறித்து அவதூறாக பேசிவிட்டார் என ராகுலுக்கு அதிகபட்ச தண்டனையாக எம்.பி பதவி பறிபோகும் நிலை ஏற்பட்டது. ஆட்சிக்கு வந்த மோடி, கருப்பு பணத்தை ஒழிக்கிறேன் என்ற பெயரில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்து புதிதாக 2000 ரூபாய் நோட்டை தொடங்கி வைத்தார். தற்போது 2000 ரூபாய் நோட்டுகளும் செல்லாது என அறிவித்துள்ளார்.ஒரு திட்டமிடல் இல்லாமல் மோடி அரசாங்கம் செயல் பட்டு வருகிறது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரே மோடி அரசாங்கம் மோசமாக உள்ளது என பேசியுள்ளார். பாராளுமன்றத்தில் மணிப்பூர் சம்பவத்தை பற்றி மோடி பேச வேண்டும் என்று நம்பிக்கை இல்லா தீர்மானம் இயற்றினால், அங்கு ஜெயலலிதா பற்றி பேசுகிறார் நிர்மலா சீதாராமன். பாராளுமன்றம் வந்த மோடி, பேசிய ஒன்றே கால் மணி நேரத்திற்கும் மேல் காங்கிரஸை எதிர்த்து தான் பேசினாரே தவிர மணிப்பூர் சம்பவம் பற்றி எதுவும் பேசவில்லை. நமது நாடு மீண்டும் சுதந்திரம் அடைய வேண்டும் என்றால் 2024 பாராளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தியை பிரதமராக்க வேண்டும்” என்றார்.

அதன் பின் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாநில செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமி, ஸ்ரீரங்கம் கோட்ட தலைவர் பி.சிவாஜி சண்முகம், அனைத்து இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கிறிஸ்டோபர் திலக் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். 51-வது வார்டு தலைவர் கண்ணன், 55-வது வார்டு தலைவர் கே.ரவி, 52-வது வார்டு தலைவர் வீரமணி, 54-வது வார்டு தலைவர் சாமிநாதன், 28 வது வார்டு தலைவர் சண்முகம், 58 வது வார்டு தலைவர் ஜெயராஜ், 60 வது வார்டு தலைவர் , ஷேக்பாய், 29 வது வார்டு தலைவர் பாபு ஆகியோர் விழாவை வழி நடத்தினர். கோட்டை முன்னோடிகளான பேங்க் முருகேசன் பெல்ட் சரவணன், அப்துல் குத்தூஸ், பூக்கடை பன்னீர், பஞ்சிகிடங்கு சேகர் , முத்தாராம்மான், விஜய் பட்டேல், மேலப்புதூர் ரமேஷ், ரவி, ஆட்டோ ரபீக், மணிவண்ணன், சேகர், சாகுல்அமீது, சுப்ரமணி, தர்பார் முருகேசன், ஜமால் முகமது, பாலையா, ஜாபர் சாதிக், விமல், அய்யாகண்ணு லெஷ்மியம்மா, அம்மா யூசுப், குமார், தங்கையன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆழ்வார்தோப்பு பஷீர் நன்றி கூறினார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.