தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதியின் இல்லத் திருமண விழா இன்று(07-07-2024) புதுக்கோட்டையில் நடைபெற்றது. இதற்காக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்து பின்னர் கார் மூலம் புதுக்கோட்டை செல்வதாக இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் அவரது வருகை ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், திமுக பிரமுகர் ஒருவர் சென்ற சொகுசு கார் விமான நிலையம் நோக்கி சென்றதாக கூறப்படுகிறது. அசுர வேகத்தில் சென்ற அந்த கார் மேலப்புதூர் பகுதியில் ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. ஒரு ஆட்டோவை நசுக்கியும், மற்றொரு டூவீலரில் மோதி தூக்கி வீசியதில் காருக்கு அடியில் டூ வீலர் சிக்கிக் கொண்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த மூன்று வாகனங்களையும் மீட்க முயன்றனர். நீண்டநேரம் காரை எடுக்க முடியாமல் போக்குவரத்து காவல்துறையினர் சிரமப்பட்டனர். நீண்ட நேரத்திற்கு பிறகு அந்த கார் மீட்கப்பட்டது. சொகுசு கார் விபத்துக்குள்ளானது பரபரப்பை ஏற்படுத்தியது.
Comments are closed.