அமெரிக்கா- ஈரான்- இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக, இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளுக்கான எரிபொருள் வரத்து தடைப்பட்டுள்ளது. இதன் காரணமாக, வர்த்தக கியாஸ் சிலிண்டர் கிடைப்பதில் பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால், உணவகங்கள், தேநீர்க்கடைகள் மற்றும் விடுதிகள் போன்றவை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், வீட்டு உபயோக கியாஸ் விநியோகத்திலும் கால தாமதம் ஏற்படும் சூழல் நிலவுகிறது. போர் பதற்றம் காரணமாக ஏற்கனவே வணிக சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் அதிர்ச்சி தரும் விதமாக இன்று (01-05-2026) வணிக சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது. வணிக பயன்பாட்டிற்கான கியாஸ் சிலிண்டரின் விலை மாதந்தோறும் முதல் தேதியில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. அந்தவகையில், வணிக பயன்பாட்டிற்குப் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடை கொண்ட கியாஸ் சிலிண்டரின் விலை இன்று 993 ரூபாய் உயர்ந்து 3,071.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் வணிக சிலிண்டரின் விலை ரூ.2,246.50 இருந்த நிலையில், இன்று ரூ.993 உயர்ந்து ரூ.3,071க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரம் வீட்டு உபயோகத்திற்கான கியாஸ் சிலிண்டர் விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.