Rock Fort Times
Online News

திருச்சி அருகே கார் மோதி கணவன் பலி : மனைவி காயம்…! 

திருச்சி அரியமங்கலம் காமராஜ் நகர் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் ஜான்பாஷா. இவரது மகன் அப்துல்லா (வயது 33 ). இவரது மனைவி சகானா பேகம் ( 26). இவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் திருச்சி-தஞ்சை சாலையில் அரியமங்கலம் லட்சுமிபுரம் பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த  கார்  ஒன்று இவர்கள் மீது மோதியது. இதில் இருவரும் கீழே விழுந்தனர் . அப்துல்லாவுக்கு தலை, முகம் ஆகிய இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கினார். சஹானா பேகம் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.  திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக  சேர்க்கப்பட்ட அப்துல்லா,  சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இது குறித்து திருச்சி தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு  போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்