Rock Fort Times
Online News

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.கதிரவன் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்…!

திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதியில் இரண்டாவது முறையாக திமுக சார்பில் போட்டியிட்டவர் எஸ்.கதிரவன். பெரம்பலூரை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பிரபல தனலட்சுமி சீனிவாசன் குழுமத்தின் தலைவர் ஏ.சீனிவாசனின் மகனான இவருக்கு கட்சித் தலைமை மண்ணச்சநல்லூரில் இரண்டாவது முறையாக போட்டியிட வாய்ப்பு அளித்தது. அதன்படி, நடைபெற்று முடிந்த 2026 சட்டமன்ற தேர்தலில் மண்ணச்சநல்லூரில் களம் கண்ட கதிரவன், தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளரை விட சுமார் 13,000 வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றி பெற்றார். இந்நிலையில், தான் வெற்றி பெற காரணமாக இருந்த மண்ணச்சநல்லூர் தொகுதி மக்களை கிராம வாரியாக நேரில் சென்று நன்றியை தெரிவிக்க திட்டமிட்ட எம்.எல்.ஏ.கதிரவன் முதல் நாளான நேற்று (ஜூன் -29) தொகுதிக்குட்பட்ட 85 சீதேவிமங்கலம் , பெரகம்பி, வாழையூர், சிறுகனூர், திருப்பட்டூர், எதுமலை, வலையூர், ஓமாந்தூர், சிறுகுடி, சிறுப்பத்தூர், சனமங்கலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது ஒன்றிய செயலாளர்கள் டி.சீனிவாச பெருமாள், செந்தில், வழக்கறிஞர் செந்தில் மற்றும் கிளை செயலாளர்கள் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் உடன் சென்றிருந்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்