திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மொண்டிப்பட்டி தமிழ்நாடு காகித தொழிற்சாலை (டி என்.பி.எல்.)அலகு – 2 செயல்பட்டு வருகிறது. இதில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு, மத்திய அரசு அறிவித்துள்ள குறைந்தபட்ச ஊதியமான 900 ரூபாய் வழங்கிட வேண்டும், தரமான உணவு வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த தொழிலாளர்கள் நேற்று காலை முதல் பணிக்கு செல்லாமல் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக வெற்றி கழக மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் கதிரவன், ஆலை நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் எவ்வித உடன்பாடும் ஏற்படாத நிலையில் இரண்டாவது நாளாக இன்றும்(30-06-2026) பணியை புறக்கணித்து ஒப்பந்த தொழிலாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Comments are closed.