Rock Fort Times
Online News

திருச்சி, காந்தி மார்க்கெட் அருகே கழிவறையில் சடலமாக கிடந்த வாலிபர்: போதை ஊசி செலுத்திக் கொண்டாரா? போலீசார் விசாரணை!

திருச்சி, காந்தி மார்க்கெட் அருகே உள்ள கல்மந்தை காலனியைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (வயது 22). இவர் இன்று(ஜூன் 30) காலை அந்த பகுதியில் உள்ள பொது கழிவறையில் மயங்கி கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது ராஜமாணிக்கம் சடலமாக கிடந்தது தெரிய வந்தது. அருகில் ஊசி ஒன்று கிடந்தது. அவரது உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அருகில் கிடந்த ஊசியை பறிமுதல் செய்தனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அந்த வாலிபர் போதை ஊசி செலுத்திக் கொண்டதால் உயிரிழந்து இருக்கலாம் என்பது தெரிய வந்தது. இருந்தாலும், பிரேத பரிசோதனை அறிக்கையின் முடிவில் தான் அதற்கான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். போதை ஊசி அவருக்கு எப்படி கிடைத்தது? யாரிடமிருந்து வாங்கினார் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இளம் பெண் மரணம்,

திருச்சியில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் வாலிபர் ஒருவருடன் தங்கியிருந்த இளம் பெண் ஒருவர் போதை ஊசி செலுத்தி கொண்டதால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. திருச்சியில் போதை ஊசி மற்றும் போதை மாத்திரைகள் விற்பவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்