திருச்சி – பெங்களூரு இடையே இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரெயில் சேவை, பயணிகளின் வசதிக்காக மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, திருச்சியில் இருந்து ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் காலை 6.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில், அன்று மதியம் 1.45 மணிக்கு பெங்களூருவை சென்றடைகிறது. மறுமார்க்கத்தில், பெங்களூருவில் இருந்து மதியம் 3.00 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரெயில், இரவு 10.30 மணிக்கு திருச்சியை வந்தடைகிறது. பயணிகளின் வரவேற்பைத் தொடர்ந்து, இந்த சிறப்பு ரெயில் சேவை ஜூலை 14, 21 மற்றும் 28 ஆகிய தேதிகளிலும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. மேலும், இந்த சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு விரைவில் தொடங்கும் என்றும், பயணிகள் முன்கூட்டியே டிக்கெட்டுகளை பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments are closed.