திருச்சி மாநகர் மாவட்ட இந்து முன்னணி அமைப்பினர் விநாயகர் சதுர்த்தி குறித்து ஆலோசனை நடத்தினர். வருகிற செப்டம்பர் மாதம் 18- ம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருச்சி மாநகரில் 500 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு செய்து செப்டம்பர் 20-ம் தேதி ஊர்வலமாக சென்று விசர்ஜனம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தினை திருச்சி கோட்ட செயலாளர் போஜராஜன் தொடங்கி வைத்தார். மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம் சிறப்புரை ஆற்றினார். மாவட்ட பொது செயலாளர் மனோஜ்குமார் முன்னிலை வகித்தார். மேலும் இக்கூட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜா, மாவட்டச் செயலாளர்கள் சுரேஷ்பாபு, ஆறுமுகம், மாவட்ட பேச்சாளர் மணிகண்டன் மற்றும் விநாயகர் சதுர்த்தி கமிட்டியினர் கலந்து கொண்டனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.