Rock Fort Times
Online News

துவரங்குறிச்சி அருகே ஆட்டுக்குட்டியை விழுங்க முயன்ற 2 மலைப்பாம்புகள் பிடிபட்டன…

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அடுத்த கஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தில் தங்கம் என்பவரது தோட்டத்தின் அருகே பழனிச்சாமி என்பவரது ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டு அருகே சென்று பார்த்தபோது இரண்டு 10 அடி நீளம் கொண்ட மலைப்பாம்புகள் படுத்துக்கிடந்தன. அதில் ஒரு மலைப்பாம்பு ஒரு ஆட்டுக்குட்டியை விழுங்கிய நிலையில் கிடந்தது. மற்றொரு மலைப்பாம்பு அதன் அருகிலேயே படுத்துக்கிடந்தது .இதனை கண்ட பழனிச்சாமி உடனடியாக துவரங்குறிச்சி தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தார். அதன்பேரில், நிலைய அலுவலர் மனோகர் மற்றும் சிறப்பு நிலைய அலுவலர் நாகேந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று 2 மலைப்பாம்புகளையும் லாவகமாக பிடித்தனர். மலைப்பாம்பு விழுங்க முயன்ற ஆட்டுக்குட்டியும் உயிருடன் மீட்கப்பட்டது. பின்னர் அந்த மலைப்பாம்புகள் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. வனத்துறையினர், அந்த மலைப்பாம்புகளை அருகிலுள்ள வனப் பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்