Rock Fort Times
Online News

ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டி தேர்வுக்கு ஹால் டிக்கெட் இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்…

ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு...

தமிழகத்தில் 2,222 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு வரும் 2024ம் ஆண்டு ஜன.7ம் தேதி நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ள நிலையில் விண்ணப்பித்துள்ளவர்கள் தங்களது ஹால் டிக்கெட்டை https://www.trb.tn.gov.in என்ற இணையதளத்தில் இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், ‘’ஆசிரியர் தேர்வு வாரியம் 2023 – 24ம் ஆண்டிற்கான பட்டதாரி ஆசிரியர், வட்டார வள மைய ஆசிரியர் தேர்வு எதிர்வரும் ஜனவரி 7ம் தேதி அன்று நடத்தப்பட உள்ளது. இதற்காக 41,478 தேர்வர்கள் விண்ணப்பித்துள்ளனர்.விண்ணப்பித்தவர்களுக்கு நுழைவு சீட்டு ஆசிரியர் தேர்வு வாரிய இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே, தேர்வுகள் தங்களது பதிவு எண் மற்றும் கடவுச்சொல் ஆகியவற்றை உள்ளீடு செய்து இன்று முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். தீர்வு கூட நுழைவு சீட்டினை பதிவிறக்கம் செய்வதில் ஏற்படும் கடைசி நேர பதற்றத்தை தவிர்க்கும் பொருட்டு தேர்வு கூட நுழைவுச் சீட்டு முன்னதாக வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேர்வர்கள் தேர்விற்கு ஒரு வார காலத்து முன்னதாகவே தங்களுக்குரிய நுழைவு சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்’’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

யார் இந்த தேவதை ! ரசிகரின் குழந்தைக்கு பெயர் வைத்த சிவகார்த்திகேயன்..

1 of 841

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்