தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23-ந் தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை வருகிற 4-ந் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் சேலத்தில் தங்கி இருக்கும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை முன்னாள் அமைச்சர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்கள். நேற்று முன்னாள் அமைச்சர் வேலுமணி மற்றும் தம்பிதுரை எம்.பி. ஆகியோருடன் ஆலோசனை நடத்தப்பட்ட நிலையில், இன்று முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர். விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர், ஓ.எஸ்.மணியன், கே.பி.முனுசாமி, சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் இளங்கோவன் ஆகியோருடன் ஆலோசனை நடத்தப்பட்டது. சுமார் 1/2 மணி நேரத்திற்கு மேலாக இந்த சந்திப்பு நடைபெற்றது. 4-ந் தேதி நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கை குறித்தும், அதன் பின்பு மேற்கொள்ள வேண்டிய அரசியல் நடவடிக்கைகள் குறித்தும் விவாதித்ததாக கூறப்படுகிறது.

Comments are closed.