Rock Fort Times
Online News

வர்த்தக சிலிண்டர் விலை ‘கிடு கிடு’ உயர்வு…* தங்கும் விடுதிகளில் கட்டணம் உயர்வு…!

வர்த்தக சிலிண்டர் விலை உயர்வு காரணமாக தங்கும் விடுதிகளில் கட்டணம் ரூ.1,000 உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழ்நாடு ஐடி விடுதி பி.ஜி. ஓனர்ஸ் அசோசியேசன் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 2026 பிப்ரவரி மாதம் முதல் வர்த்தக சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கிறது. ஒரு சிலிண்டர் ரூ.6000 முதல் ரூ.7000 கொடுத்து வாங்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் மர அடுப்புகளை பயன்படுத்தி எங்களால் முடிந்த அளவுக்கு உணவு அளித்துக் கொண்டிருக்கிறோம். மரக்கட்டைகளின் விலையும் விண்ணளவு உயர்ந்துள்ளது. மளிகைப் பொருட்களின் விலையும் உயர்ந்து கொண்டே இருக்கிறது. எனவே தங்கும் விடுதிகளின் கட்டணம் மே 5-ம் தேதி முதல் வழக்கமான கட்டணத்துடன் ரூ.1000 உயர்த்தப்படுகிறது. ஒரு சில விடுதிகளில் வசதிகளை பொறுத்து கட்டணம் மாறுபடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்