தூத்துக்குடி மாவட்டத்தில் மழை பாதித்த பகுதிகளில் நிவாரண பணிக்காக 6 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தூத்துக்குடி மாநகராட்சி, மாப்பிளையூரணி ஊராட்சிக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரி கார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளார். ஏரல், ஆவரங்காடு, இடையர்காடு உள்ளிட்ட பகுதிகளை ஐ.ஏ.எஸ். அதிகாரி தரேஸ் அகமது கவனிப்பார். பழையகாயல், முக்காணி, கொற்கை, உமரிகாடு உள்ளிட்ட பகுதிகளுக்கு ஆல்பி ஜான்வர்கீஸ் ஐ.ஏ.எஸ். அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல் ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, கருங்குளம் பகுதிக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரி பொன்னையா, ஆழ்வார்திருநகரி பேரூராட்சி சுற்றுவட்டார பகுதிக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரி தினேஷ் ஆலிவர் பொன்ராஜ், குலசேகரநத்தம், அப்பன்திருப்பதி உள்ளிட்ட பகுதிகளுக்கு கிரண்குராலா ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
1
of 840
Comments are closed, but trackbacks and pingbacks are open.