திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஹேமச்சந்திரன். இவர் கோவை மாவட்டம் சூலூரில் தங்கி அங்குள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில் நேற்று ( 21.12.2023 ) இரவு ஹேமச்சந்திரன் தனது நண்பர்களுடன் சேர்ந்து கண்ணம்பாளையம் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் பரோட்டா சாப்பிட்டதாக கூறப்படுகிறது. தொடா்ந்து தனது அறைக்கு சென்ற மாணவா் ஹேமசந்திரன் அசைவின்றி இருந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சக மாணவர்கள் அவரை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஹேமச்சந்திரன் ஏற்கனவே இறந்து விட்டதாக தொிவித்துள்ளனா். இதுகுறித்து சூலூர் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. காவல் துறையினர் மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பரோட்டா சாப்பிட்டுவிட்டு உறங்கிய கல்லூரி மாணவர் பலியான சம்பவம் சோகத்தையும் அதிா்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.