திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். நரம்பியல், சிறுநீரகவியல் ,
எலும்பு முறிவு, கண் சிகிச்சை பிரிவு என 16க்கும் மேற்பட்ட துறைகள் இங்கு உள்ளது. ஏறத்தாழ 250 மருத்துவர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் மகப்பேறு , குழந்தை மற்றும் மயக்கவியல் மருத்துவர்கள் உள்ளிட்ட 23 மருத்துவர்களுக்கு கடந்த மூன்று மாத காலமாக சம்பளம் வழங்கப்படவில்லை. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் மற்றும் தமிழக முதல்வரின் தனி பிரிவிற்கு மனு அனுப்பியும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட மருத்துவர்கள் அனைவரும் திருச்சி அரசு தலைமை மருத்துவமனை முன்பாக கோரிக்கைகளை வலியுறுத்தி, முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் குறித்து பேசிய மருத்துவர்கள், வரும் காலங்களில் நிரந்தரமாக மருத்துவர்களுக்கு ஊதியம் வழங்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இந்த மூன்று மாத சம்பளம் தடைபட்டதற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை வேண்டும். சம்பள நிலுவைத் தொகைக்குரிய வட்டியை சம்பளத்துடன் சேர்ந்து வழங்க வேண்டும். மேலும் உறுப்பினர்கள் கைரேகை வருகைப்பதிவினை புறக்கணிக்க இருப்பதாகவும், அத்துடன் அனைத்து மருத்துவர்களையும் ஒன்றிணைத்து போராட்டம் நடத்துவது குறித்து முடிவு செய்து விரைவில் அறிவிப்போம் என்றனர்.
ஸ்ரீரங்கம் தைத்தேர் 2025 || 11-ம் திருநாள் || ஸ்ரீநம்பெருமாள் ஆளும் பல்லக்கு

Now Playing
ஸ்ரீரங்கம் தைத்தேர் 2025 || 11-ம் திருநாள் || ஸ்ரீநம்பெருமாள் ஆளும் பல்லக்கு

Now Playing
தைப்பூச விழா தங்கை சமயபுரம் மாரியம்மனுக்கு அண்ணன் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சீர் கொடுக்கும் வைபவம்

Now Playing
ஸ்ரீரங்கம் நம்பெருமாள் பூபதி திருநாள் 10ம் திருநாள் மாலை சப்தாவரணம் திருவீதி சுற்று

Now Playing
நாட்டுக்கு நல்லது சொல்லும் || சிறப்பான மேடைப் பேச்சு...

Now Playing
நாட்டுக்கு நல்லது சொல்லும் || சிறப்பான மேடைப் பேச்சு...

Now Playing
ஸ்ரீரங்கம் தைத்தேர் 2025. (9-ம் திருநாள் ) தீர்த்தவாரி..!
1
of 989

Comments are closed, but trackbacks and pingbacks are open.