Rock Fort Times
Online News

திருச்சியில் ஆவின் பால் தட்டுப்பாட்டால் வாடிக்கையாளர்களுக்கு சப்ளை செய்ய முடியாத நிலை…* முகவர்கள் குமுறல்!

அரசு சார்பில் விநியோகம் செய்யப்படும் ஆவின் பால் பாக்கெட்டுகளுக்கு ஏராளமான வாடிக்கையாளர்கள் உள்ளனர். இதற்காக முகவர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு ஒரு நாளைக்கு இத்தனை லிட்டர் பால் என விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கடந்த ஒரு வார காலமாக திருச்சியை சேர்ந்த முகவர்களுக்கு சரியான அளவு ஆவின் பால் விநியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. ஆவின் பால் பாக்கெட்டுகள் ஒரு நாளைக்கு 100 லிட்டருக்கு மேல் குறைவாக வருவதாகவும், இதனால் வாடிக்கையாளர்களுக்கு சரியான அளவு பால் விநியோகம் செய்ய முடியவில்லை. குறிப்பாக கிரீன் மேஜிக் பால் மிகவும் குறைவாக வருவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ஆவின் முகவர் ஒருவர் கூறுகையில், தினமும் எங்களுக்கு வரும் ஆவின் மேஜிக் பால் தினமும் 100 முதல் 170 லிட்டர் வரை குறைவாக வருகிறது. இதனால் வாடிக்கையாளர்களுக்கு சப்ளை செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால், வாடிக்கையாளர்களுக்கும், முகவர்களுக்கும் இடையே தேவையற்ற வாக்குவாதம் ஏற்படுகிறது. இதுதொடர்பாக அதிகாரிகள் மட்டத்தில் கேட்டபோது, வெயில் அதிகமாக இருப்பதால் மாடு குறைவாக பால் கறப்பதாகவும், இதனால் உற்பத்தி குறைந்து போனதாகவும்
ஆரோக்கியா போன்ற தனியார் நிறுவனங்கள் அதிக விலைக்கு பாலை கொள்முதல் செய்வதால் விவசாயிகள் அவர்களிடம் விற்று விடுவதாகவும், இதனால், ஆவின் நிறுவனத்துக்கு பால் வரத்து குறைந்து விட்டதாகவும் காரணம் சொல்கிறார்கள். இதனை சரி செய்ய அரசே கறவை மாடுகளை வளர்க்க வேண்டும். குறிப்பாக கோவிலுக்கு சொந்தமான நிலங்களை மேய்ச்சல் நிலங்களாக மாற்றி கறவை மாடுகளை அரசே வளர்த்தால் பால் உற்பத்தியை பெருக்க முடியும் என்று கூறினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்