‘நீட்’வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 4 கோரிக்கைகளை முன்வைத்து டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர்,
தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களோடு இணைந்து மாணவர்களும் போராடினர். அவர்கள் மீது தடியடி நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அவர்களது போராட்டத்திற்கு ராகுல்காந்தி எம்பி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களும் ஆதரவு தெரிவித்தனர். இந்தநிலையில் இன்று (ஜூலை 25) மத்திய கல்வி அமைச்சர் பொறுப்பில் இருந்து தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தார். இதுகுறித்து கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் கூறும்போது, நாங்கள் வைத்த 4 முக்கியக் கோரிக்கைகளில் கல்வி அமைச்சர் ராஜினாமா நடந்திருக்கிறது. இரண்டாவதாக, நீட் தேர்வால் உயிரிழந்த அனைத்து மாணவர்களின் குடும்பத்தினருக்கு ம் 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். மூன்றாவதாக, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது. நான்காவதாக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது வன்முறையை நிகழ்த்திய ஆர்ஏஎஃப் மற்றும் டெல்லி காவல்துறை மன்னிப்பு கேட்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் இன்னும் நிலுவையிலேயே இருக்கின்றன. அதுவரை போராட்டம் ஓயாது என்று தெரிவித்தனர்.
போராட்டம் வாபஸ்,
இந்தநிலையில் மத்திய அமைச்சர்களுடன் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நிர்வாகிகள் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாது என உறுதியளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து போராட்டத்தை வாபஸ் பெறுவதாக சிஜேபி நிர்வாகிகள் அறிவித்தனர். இதன்மூலம் டெல்லியில் 36 நாட்களாக நடைபெற்ற போராட்டம் முடிவுக்கு வந்தது.

Comments are closed.