Rock Fort Times
Online News

88-வது பிறந்தநாளில் ‘அரசியல் துறவறம்’ அறிவித்தார், டாக்டர் ராமதாஸ்…!

திண்டிவனம் அடுத்த கோனேரிகுப்பத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி வளாகத்தில் இன்று(25-07-2026)
டாக்டர் ராமதாஸின் 88-வது பிறந்தநாள் விழா கல்லூரி மாணவர்கள், கட்சி நிர்வாகிகளாலும் தொண்டர்களாலும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய டாக்டர் ராமதாஸ், தனது உடல்நலக் குறைவு குறித்த தகவல்களையும், வருங்கால அரசியல் நிலைப்பாடு குறித்த மிக முக்கியமான முடிவையும் பகிர்ந்து கொண்டார்.எனக்கு இன்றுடன் 88-வது வயது தொடங்குகிறது. இன்று முதல் நான் முழுமையான அரசியல் துறவறம் மேற்கொள்கிறேன். இனி நான் மேடைகளிலோ, அல்லது பொதுவெளியிலோ அரசியல் பேச மாட்டேன். கட்சியின் எந்தவொரு அரசியல் முடிவுகளிலும் தலையிட மாட்டேன்.” பாட்டாளி மக்கள் கட்சியின் அனைத்து அரசியல் விவகாரங்கள், முடிவுகள் மற்றும் செயல்பாடுகளை அன்புமணி ராமதாஸ் முழுமையாகப் பார்த்துக் கொள்வார்.”இன்று முதல் நான் ஒரு அரசியல் துறவியாகி விட்டேன். எனவே நல விசாரிப்புகளைத் தவிர வேறு எதையும் என்னிடம் பேச வேண்டாம்” என மிகவும் உருக்கமாகத் தெரிவித்து உரையை நிறைவு செய்தார். தமிழக அரசியலில் கடந்த பல தசாப்தங்களாகச் சமூக நீதி, இடஒதுக்கீடு மற்றும் மதுவிலக்கு உள்ளிட்ட பல போராட்டங்களை முன்னெடுத்து, பா.ம.க-வைச் சக்திவாய்ந்த அரசியல் இயக்கமாக வழிநடத்தியவர் ராமதாஸ். தனது 88-வது பிறந்தநாளில் அவர் அறிவித்துள்ள இந்த ‘அரசியல் துறவறம்’, பா.ம.க தொண்டர்களிடையேயும் தமிழக அரசியல் வட்டாரத்திலும் மிகப்பெரிய அதிர்வலையையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்