திருச்சிக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல்- 4 பயணிகளிடம் கிடுக்கிப்பிடி விசாரணை…!
திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து உள்ளூர் மற்றும் வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதேபோல வெளிநாடுகளில் இருந்தும் விமானங்கள் வந்து செல்கின்றன. அந்தவகையில் சிங்கப்பூர் மற்றும் கோலாலம்பூரில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தடைந்த பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை விமான நிலைய அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது நான்கு பயணிகள் ரூ.1 கோடியே 16 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 488 கிராம் எடையுள்ள 4 தங்க சங்கிலிகள், 2 தங்க வளையல்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து அவர்களை கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள், அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed.