தீபாவளி பண்டிகை அக்டோபர் 31ம் தேதி வியாழக்கிழமை உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. பண்டிகைக்காக ஏற்கனவே வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நான்கு நாட்கள் விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் படிப்புக்காக வெளியூர்களில் தங்கியுள்ள மாணவ, மாணவிகள் அவரவர் சொந்த ஊர்களுக்கு செல்லும் வகையில் நாளை(30-10-2024) காலை முதல் மதியம் வரை மட்டுமே பள்ளி, கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் செயல்படும் என்றும், மதியத்திற்கு பிறகு அரை நாள் விடுமுறை விடப்படுவதாக தற்போது தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதனால் மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Comments are closed.