Rock Fort Times
Online News

சூர்யா நடித்த “கங்குவா” படத்தின் எடிட்டர் திடீரென உயிரிழப்பு – அடுக்குமாடி குடியிருப்பில் சடலமாக கிடந்தார்…!

சூர்யா நடிப்பில் வெளியாகவுள்ள கங்குவா திரைப்படத்தின்  எடிட்டர் நிஷாத் யூசூப் திடீரென உயிரிழந்தார்.  இயக்குநர் சிவா-நடிகர் சூர்யா கூட்டணியில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ள நிலையில், நவம்பர் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.  இப்படத்துக்கான புரமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் சூழலில், அந்தப் படத்தின் எடிட்டர் நிஷாத் யூசூப் இன்று(30-10-2024) காலை திடீரென உயிரிழந்தார்.  43 வயதாகும் நிஷாத், மலையாளம் மற்றும் தமிழ் மொழித் திரைப்படங்களுக்கு  எடிட்டர் ஆக பணியாற்றி வந்தார். கடந்த 2022ம் ஆண்டு தல்லுமாலா படத்துக்காக சிறந்த  எடிட்டருக்கான மாநில விருது நிஷாத்துக்கு வழங்கப்பட்டது.  மேலும்  உண்டா, ஒன், சௌதி வெள்ளக்கா மற்றும் அடியோஸ் அமிகோஸ் உள்ளிட்ட பிரபல திரைப்படங்களில்  எடிட்டர் ஆக பணியாற்றியுள்ளார்.  சூர்யாவின் கங்குவா திரைப்படத்தை தொடர்ந்து, சூர்யா 45, மம்முட்டி மற்றும் மோகன்லால் நடிக்கும் திரைப்படங்களில் பணியாற்ற நிஷாத் ஒப்பந்தம் ஆகியிருந்தது குறிப்பிடத்தக்கது. கொச்சி பனம்பிள்ளி நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள அவரது வீட்டில் நிஷாத் யூசூப் சடலமாக கிடந்துள்ளார். இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த கொச்சி காவல்துறையினர், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கெனவே கங்குவா திரைப்படத்தின் கலை இயக்குநர் மிலன் உயிரிழந்த நிலையில், தற்போது எடிட்டரும் மரணமடைந்துள்ளார்.  விடாமுயற்சி திரைப்படத்தின் பணிகளுக்காக அஜர்பைஜான் சென்றிருந்த மிலன், அங்கு மாரடைப்பால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

🔴ஸ்ரீரங்கம் ஸ்ரீரெங்கநாச்சியார் ஊஞ்சல் திருநாள் (டோலோத்சவம்) || 3ம் நாள் || சிறப்பு தொகுப்பு ||

1 of 901

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்