Rock Fort Times
Online News

மக்கள் சேவையாற்ற எனக்கு வாய்ப்பு தாருங்கள்- அதிமுக வேட்பாளர் கருப்பையா தேர்தல் பிரச்சாரம்…!

திருச்சி பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கருப்பையாவை ஆதரித்து மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் ‘ரோடு ஷோ’ திருச்சியில் நடந்தது. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர்கள் ப.குமார், ஜெ.சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேட்பாளர் கருப்பையா, அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் திறந்த ஜீப்பில், காந்தி மார்க்கெட் கமான் வளைவு அருகில் தொடங்கி பெரிய கடைவீதி, கோட்டை வாசல், என்எஸ்பி ரோடு, கல்லூரி சாலை, மேலப்புலிவார்டு ரோடு வழியாக சென்ற பேரணி சிங்காரத்தோப்பு கார்னரில் நிறைவடைந்தது. ‘ரோடு ஷோ’ நிறைவில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில், கடந்த 5 ஆண்டுகளாக திருச்சி லோக்சபா தொகுதியில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்ப, அதிமுக சார்பில் கருப்பையா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். திருச்சியின் வளர்ச்சிக்கும், மக்களின் தேவைகளை நிறைவேற்றவும், திருச்சி மக்கள் அதிமுக வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றார்.

வேட்பாளர் கருப்பையா பேசுகையில்,‘‘திருச்சி மக்களின் தேவைகளையும், உணர்வுகளையும் அறிந்த உள்ளூர் வேட்பாளராக நான் போட்டியிடுகிறேன். உங்களுக்கு எந்த பிரச்சனை என்றாலும், உங்களுக்கு முன்பாக, உங்களுடன் நின்று குரல் கொடுப்பேன். திருச்சியின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும், உங்களின் தேவைகளுக்கும் லோக்சபாவில் மக்களின் குரலாக ஓங்கி ஒலிப்பேன். அதிமுக ஆட்சியில் தொடங்கி, திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட மக்கள் நலத்திட்டங்கள் மீண்டும் தொடங்கவும், தொடரவும், தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைவதற்கு அச்சாரமாகவும், திருச்சி மக்களுக்கு சேவையாற்ற ஒரு வாய்ப்பு வழங்கும் வகையில் அதிமுக சார்பில் போட்டியிடும் எனக்கு இரட்டை இலை சின்னத்தில் ஓட்டளித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்’’, என்றார்.

‘ரோடு ஷோ’வில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் இருசக்கர வாகனங்களிலும், நடந்தும் 3 கிலோ மீட்டருக்கும் மேலாக ‘இரட்டை இலை’க்கு ஓட்டு சேகரித்தனர். நிகழ்ச்சியில், அமைப்புச் செயலாளர்கள் ரத்தினவேல், மனோகரன், மாவட்ட துணை செயலாளர் வனிதா, ஜெ.பேரவை மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், மாநில பேரவை துணைச் செயலாளர் கவுன்சிலர் அரவிந்தன், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் முத்துக்குமார், மாணவரணி மாவட்ட செயலாளர் இன்ஜினியர் இப்ராம் ஷா, சிறுபான்மை பிரிவு வடக்கு மாவட்ட செயலாளர் புல்லட் ஜான்,பகுதி செயலாளர்கள் அன்பழகன்,சுரேஷ் குப்தா, ரோஜர் , பூபதி, சுந்தர்ராஜன், நிர்வாகிகள் இன்ஜினியர் ராஜா, நாட்டாமை சண்முகம், மார்க்கெட் பிரகாஷ், கயிலை கோபி, தேமுதிக மாவட்டச் செயலாளர் டி.வி.கணேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக, திருவெறும்பூர் ஒன்றியம், துவாக்குடி நகர பகுதிகளிலும் அதிமுக வேட்பாளர் கருப்பையா கிராமம், கிராமமாக ஓட்டு சேகரித்தார்.

அடாத மழையிலும் விடாது டாஸ்மார்க் நோக்கி படையெடுக்கும் குடிமகன்கள்..

1 of 927

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்