108 திவ்ய தேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சுவாமியை தரிசித்து செல்கின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் 7 பிரகாரங்களை நடந்தே சென்று தரிசனம் செய்ய வேண்டி உள்ளது. அவர்களில் வயது முதிர்ந்தோர், நோயாளிகள், கர்ப்பிணிகள் போன்றவர்கள் தரிசனத்திற்காக நீண்ட நேரம் காத்திருக்கிறார்கள். அவ்வாறு வரிசையில் காத்திருக்கும்போது சற்றே அமர்ந்து, தாங்களை ஆசுவாசப்படுத்திக்கொண்டு பின் தரிசன வரிசைக்கு செல்ல ஏதுவாக 3 நபர்கள் அமரும் ஸ்டீல் சேர்கள் 5 யூனிட்டை பக்தர்கள் வசதிக்காக கனரா வங்கி வழங்கியுள்ளது. அதனை, திருச்சி மண்டல துணை பொது மேலாளர் சுமலதா, கோவில் இணை ஆணையர் மாரியப்பனிடம் வழங்கினார். அப்போது சுந்தர்பட்டர், தமிழ்ச்செல்வி, பிரேம்குமர், கார்த்திக் கண்ணன் மற்றும் கோவில் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.