திருச்சி பாலக்கரை மல்லிகைபுரம் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் கில்பர்ட் டேனியல். இவரது மனைவி பாட்ரிசியா செலஸ். இருவரும் வெளிநாடு செல்ல முடிவு செய்தனர். இதற்காக, தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மேல காவேரியை சேர்ந்த காஜா மொய்தீன் (வயது 45) என்பவரை அணுகினர். அவர், வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.11 லட்சத்து 60 ஆயிரத்தை தம்பதியிடம் வாங்கிக் கொண்டு ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஜெ.எம்.4 நீதிமன்றத்தில் புகார் அளிக்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவின் பேரில், போலீசார் காஜாமொய்தீன் மீது மோசடி வழக்கு பதிவு செய்ய திருச்சி பாலக்கரை போலீசாருக்கு அறிவுறுத்தினர்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து பாலக்கரை போலீசார் காஜா மொய்தீன் மீது மோசடி உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.