புதுக்கோட்டையில் போலியோ சொட்டு மருந்து முகாம்…* குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கி அமைச்சர் முகமது பர்வேஸ் தொடங்கி வைத்தார்..!
தமிழகம் முழுவதும் இன்று(28-06-2026) போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற முகாமை முதல்வர் சி.ஜோசப் விஜய் தொடங்கி வைத்தார். அதேபோல, புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் கீழ் இயங்கும் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்கத்தின் சார்பில் தேசிய போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது. இந்த சிறப்பு முகாமில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஜா. முகமது பர்வேஸ் பங்கேற்று போலியோ சொட்டு மருந்து வழங்கி தொடங்கி வைத்தார். இந்த முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் குழந்தைசாமி, மாநகராட்சி ஆணையர் காந்திராஜ், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் பிரகாஷ், இணை இயக்குனர் பொது சுகாதாரம் (சென்னை) சதீஷ் ராகவன், நகர்நல அலுவலர் மரு.காயத்ரி, மாவட்ட சுகாதார அலுவலர் மரு.ஹம் சந்த் காந்தி, மாவட்ட சுகாதார அலுவலர் (அறந்தாங்கி) மரு.விஜயகுமார், துணை காவல் கண்காணிப்பாளர் பிருந்தா மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார அலுவலர்கள், பொதுமக்கள், முன்னாள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட பலர் பங்கேற்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் ஐந்து வயதுக்குட்பட்ட உட்பட்ட 1.16 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தாய்மார்கள் தங்களது குழந்தைகளுக்கு ஆங்காங்கே நடைபெறும் முகாம்களில் சொட்டு மருந்து வழங்கிடுமாறு அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Comments are closed.