Rock Fort Times
Online News

பொங்கலுக்கு சொந்த ஊர் போக வேண்டுமா?- சிறப்பு பேருந்துகள் ‘ரெடி’…

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகிற 15-1-2024( திங்கட்கிழமை) சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. பணி நிமித்தமாக சென்னை உள்பட பல்வேறு ஊர்களில் பணியாற்றுபவர்கள் இந்நாளில் சொந்த ஊருக்கு பயணம் மேற்கொள்வார்கள்.

இதனால், பஸ், ரயில்களில் கூட்டம் அதிகமாக காணப்படும். இதனை கருத்தில் கொண்ட தமிழ்நாடு அரசு, பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு பேருந்துகளை இயக்க முன்வந்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் லிமிடெட், மேலாண் இயக்குநர் மோகன் வெளியிட்டு செய்தி குறிப்பில்,
வருகிற 15ம் தேதி பொங்கல் திருநாளை முன்னிட்டு தொடர் விடுமுறை நாட்கள் வருவதால் 11.01.2024 (வியாழக்கிழமை) முதல் 14.01.2024 – (ஞாயிற்றுக்கிழமை) வரை பொதுமக்கள் பயணம் செய்ய கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதன்படி, சென்னையிலிருந்து கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி, நன்னிலம், நாகப்பட்டினம், காரைக்கால், வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், திருச்சி, அரியலூர், ஜெயங்கொண்டம், கரூர், புதுக்கோட்டை, காரைக்குடி, இராமநாதபுரம், மதுரை ஆகிய இடங்களுக்கும், திருச்சியிலிருந்து தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மதுரை ஆகிய இடங்களுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

மேலும் மதுரை, கோயம்புத்தூர், திருப்பூர் போன்ற ஊர்களிலிருந்து திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய ஊர்களுக்கும் மற்றும் கும்பகோணம் போக்குவரத்து கழக இயக்க பகுதிக்கு உட்பட்ட அனைத்து முக்கிய நகரங்களுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. மேலும், அனைத்து முக்கிய நகரங்களிலிருந்து அனைத்து நகர் பேருந்துகளும் பயணிகள் தேவைக்கு ஏற்ப இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் 11.01.2024 முதல் 14.01.2024 வரை சென்னையிலிருந்து மற்ற ஊர்களுக்கு செல்லும் பொதுமக்கள் எளிதாக பயணம் செய்யும் வகையில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி, நன்னிலம், திருவையாறு, ஒரத்தநாடு தட பேருந்துகள் தாம்பரம் சானிடோரியம் (MEPZ) அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்தும், கரூர், திருச்சி அரியலூர், செந்துறை, ஜெயங்கொண்டம், புதுக்கோட்டை அறந்தாங்கி, ராமநாதபுரம், ராமேஸ்வரம், பரமக்குடி, மதுரை, கமுதி, முதுகுளத்தூர், நாகப்பட்டிணம், வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, சீர்காழி, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம் தட பேருந்துகள் கோயம்பேடு புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட உள்ளது.

அதேபோல, பொங்கல் முடிந்து திரும்ப அவரவர் ஊர்களுக்கு செல்ல 16.01.2024, 17.01.2024, 18.01.2024 ஆகிய நாட்களில் சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொங்கலுக்கு முன் 10.01.2024 முதல் 14.01.2024 நாட்களில் சென்னையிலிருந்து மேற்படி இடங்களுக்கு 1,850 சிறப்பு பேருந்துகளும், கோவை, திருப்பூர், மதுரை, திருச்சி தஞ்சாவூர், புதுக்கோட்டை ராமநாதபுரம். காரைக்குடி தடங்களில் 1,295 சிறப்பு பேருந்துகளும், அதேபோன்று பொங்கலுக்கு பின் 16.01.2024 முதல் 18.01-2024 நாட்களில் அவரவர் ஊர்களுக்கு திரும்பிச் செல்ல சென்னை தடத்தில் 1,460 சிறப்பு பேருந்துகளும், பிற தடங்களில் 1,151 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது. இதற்காக சிறப்பு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு பணிபுரிய உள்ளனர். முக்கிய நகரங்களுக்கிடையே இயக்கப்படும் பேருந்துகளுக்கு முன்பதிவு சேவை விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, பயணிகள் www.tnstc.in இணைய முகவரி மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் கூட்ட நெரிசலை தவிர்த்து எவ்வித சிரமம் இன்றி பயணிக்க மொபைல் ஆப் TNSTC (Mobile App) Android / I phone கைபேசி மூலமாகவும் முன்பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளா

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்