இந்திய நாடார் பேரவையின் முன்னாள் நிர்வாகி ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்திய நாடார் பேரவை தலைவர் ஜெ.டி.ஆர். சுரேஷை கண்டோன்மெண்ட் போலீசார் அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது அவரை காவல்துறை அதிகாரி ஒருவர் துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.
இதை கண்டித்து இன்று(6-1-2024) இந்திய நாடார் பேரவை தலைவர் சுரேஷ் தலைமையில் கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் பேரவையின் பொதுச்செயலாளர் ராஜ்குமார், தலைமைச் செயலாளர் ஜெயராஜ், பொருளாளர் எஸ்.வி. கணேசன், துணை பொருளாளர் கே.ஆர்.பி. ராஜா, மாநில அமைப்பாளர் பாலகிருஷ்ணன், அமைப்புச் செயலாளர் அய்யனார், பொன்ராஜ், மாநில ஒருங்கிணைப்பாளர் சாம்சன், புறநகர் துணைத்தலைவர் அருள்தாஸ், புறநகர் இளைஞரணி செயலாளர் அஜின், செய்தி தொடர்பாளர் ஞானகுமார், மண்டலத் தலைவர் ஜான் வெஸ்லி, மாநகரத் துணைத் தலைவர் கே.செல்வராஜ், மாநகர் மாவட்ட செயலாளர் பீமநகர் ராஜேஷ், மாவட்ட அமைப்பாளர் பரமசிவம், மாநகர துணை செயலாளர் பூலோக பாண்டியன், ஏர்போர்ட் சுப்பிரமணியன், செயற்குழு உறுப்பினர்கள் சேவியர், பரமசிவன், மோசஸ், சாலமன் மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். அவர்களிடம் உதவி போலீஸ் கமிஷனர் கென்னடி பேச்சுவார்த்தை நடத்தினார். அதைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த திடீர் போராட்டத்தால் கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.