Rock Fort Times
Online News

மணப்பாறை டி.என்.பி.எல். ஒப்பந்த ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம்…!

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே மொண்டிப்பட்டியில் தமிழ்நாடு செய்தித்தாள், காகித நிறுவனத்தின் அலகு இரண்டு செயல்பட்டு வருகிறது. காகித அட்டை தயாரிக்கும் இந்த ஆலையில் 2400 க்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த ஏப்ரல் மாதம் வழங்க வேண்டிய ஊதிய உயர்வு 3 மாதத்திற்கு மேலாகியும் இதுவரை வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் மத்திய அரசு அறிவித்துள்ள குறைந்த பட்ச ஊதியம் வழங்க வேண்டும். நிரந்தர பணியாளர்களுக்கு வழங்குவது போல் தரமான உணவு வழங்க வேண்டும். வார விடுமுறை நாட்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட ல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலை 6 மணிக்கு பணிக்கு செல்ல வேண்டிய ஒப்பந்த தொழிலாளர்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்