Rock Fort Times
Online News

முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசாவின் அண்ணி மரணம்…!

பெரம்பலூர் மாவட்டம், வேலூர் கிராமத்தைச் சேர்ந்த பேராசிரியர் மற்றும் அரசின் காலநிலை மற்றும் மேலாண்மை குறித்த மேல்நிலை குழு உறுப்பினர் ஆ. ராமச்சந்திரன் மனைவியும், ஆ. சிவசண்முகம், இந்து சமய அறங்காவலர் குழு தலைவர் ஆ. கலியபெருமாள், முன்னாள் மத்திய மந்திரி, தி.மு.க. துணை பொது செயலாளர் மற்றும் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ. ராசா ஆகியோரின் அண்ணியும், இரா.ராம்கணேஷ், முனைவர் இரா.பிரியதர்ஷினி ஆகியோரின் தாயாருமான இரா.உமாராணி இன்று ( 10.08.2023 ) மரணமடைந்தார். அவரது உடலுக்கு கட்சி நிர்வாகிகள், உறவினர்கள், உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது இறுதி ஊா்வலம்   இன்று மாலை 4 மணி அளவில் திருச்சி திருவானைக்காவல் சிவராம்நகரில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து புறப்படும் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்