Rock Fort Times
Online News

மணப்பாறை அருகே கிராவல் மண் எடுப்பதில் இரு தரப்பினர் மோதல் : 6 பேர் காயம்..

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள கருப்பூர் ஊராட்சி செவகாட்டூரை சேர்ந்த அடைக்கன் மகன் ஆண்டிவேல் என்பவர் பெயரில் கிராவல் மண் எடுக்க வருவாய்துறையினர் அனுமதி வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஆண்டிவேலுக்கு அனுமதி அளிக்கப்பட்ட இடத்தில் மற்றொரு கும்பல், கிராவல் மண் எடுக்க முயன்றுள்ளனர். இதனை அறிந்த ஆண்டிவேல் தரப்பினர், இங்கு மண் எடுக்க எங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் நீங்கள் எப்படி மண் எடுக்கலாம் என்று கேட்டுள்ளனர். அப்போது , இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில் 6 பேர் காயமடைந்தனர். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் இருதரப்பினரையும் சமாதானபடுத்தினர். பின்னர் காயமடைந்த 6 பேரை மணப்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்த புகாரின் பேரில் புத்தாநத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்