கொரோனா காலகட்டத்தில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நேரத்தில் பாசஞ்சர் ரயில்களின் கட்டணம் உயர்த்தப்பட்டது. அதாவது, பாசஞ்சர் ரயில்களை சிறப்பு விரைவு ரயில்கள் என பெயர் மாற்றிய மத்திய அரசு விரைவு ரயில்களில் வசூலிக்கப்படும் கட்டணத்தை வசூலித்தது. இதன் காரணமாக பயணிகள் கூடுதல் கட்டணத்தை செலுத்தி பாசஞ்சர் ரயில்களில் பயணித்து வந்தனர். ஆனால், கொரோனா தொற்று முழுமையாக சீரடைந்த பின்பும் ரயில் கட்டணம் குறைக்கப்படவில்லை. ஆகவே, பாசஞ்சர் ரயில்களில் பழைய கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என பயணிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்தநிலையில் பாசஞ்சர் ரயில்களில் பழைய கட்டணத்தை வசூலிக்க இருப்பதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதாவது, 200 கிலோ மீட்டருக்கும் குறைவான தொலைவு செல்லும் ரயில்களில் பழைய கட்டணமே வசூலிக்க தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது. அதன்படி குறைந்தபட்ச கட்டணம் ரூ.30 லிருந்து ரூ.10 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையிலிருந்து திருப்பதி செல்வதற்கான ரயில் கட்டணம் ரூ.70 லிருந்து 35 ஆக குறைந்துள்ளது. இதேபோல, பல்வேறு வழித்தடங்களிலும் ரயில் கட்டணம் வெகுவாக குறையும். இதனால் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
1
of 850
Comments are closed, but trackbacks and pingbacks are open.