நிலவை ஆய்வு செய்ய சந்திரயான்-3, சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல்- 1 திட்டங்களை வெற்றிகரமாக செலுத்திய இஸ்ரோ தற்போது மனிதனை விண்ணுக்கு அனுப்பும் திட்டத்தை செயல்படுத்த உள்ளது. அதற்கான வீரர்களை தேர்வு செய்த இஸ்ரோ, அவர்களின் பெயர் விவரங்களை ரகசியமாக வைத்திருந்தது.
அவர்கள் ரஷ்யாவில் பயிற்சி பெற்றனர். இந்நிலையில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையத்திற்கு பிரதமர் மோடி இன்று(27-02-2024) சென்றார். அங்கு அவர் ககன்யான் திட்ட பணிகளை ஆய்வு செய்தார். அப்போது இஸ்ரோ தலைவர் சோம்நாத், ககன்யான் திட்டப் பணிகள் குறித்து பிரதமருக்கு விளக்கம் அளித்தார். இந்த ஆய்வின்போது கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன், கவர்னர் முகமது ஆரிப்கான், மத்திய அமைச்சர் முரளிதரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். பின்னர் விண்வெளிக்கு செல்லும் விமானப்படை குரூப் கேப்டன் பிரசாந்த் நாயர், பிரசாத், கிருஷ்ணன், சுபன்சூ சுக்லா ஆகிய 4 வீரர்களை அறிமுகம் செய்து கவுரவித்தார். அவர்களுக்கு அடையாள பட்டையையும் வழங்கினார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.