Rock Fort Times
Online News

சொத்து குவிப்பு வழக்கு: திமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை விடுவிக்க நீதிமன்றம் மறுப்பு…!

கடந்த திமுக ஆட்சியில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சராக பதவி வகித்தவர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம். இவர் கடந்த 2006ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சிக்காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக 3 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இதுதொடர்பாக எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், அவரது குடும்பத்தினர் மீது வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு கடலூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அதன் பின்னர் இந்த வழக்கில் இருந்து எம்.ஆர்.கே பன்னீர்செல்வமும், அவாது குடும்பத்தினரும் விடுவிக்கப்பட்டனர். இந்த உத்தரவை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை கடலூர் உயர்நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்தது. இதுதொடர்பான விசாரணையின் போது எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்த உத்தரவை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனிடையே, இந்த வழக்கில் இருந்து தன்னையும், தனது குடும்பத்தினரையும் விடுவிக்க வேண்டும் என எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல். செய்யப்பட்டது. அந்த மனு இன்று (22-09-2026) விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிமன்றம், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவிக்க மறுப்பு தெரிவித்து அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்