திருச்சி சமயபுரம் டோல்கேட் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தகுமாரி. இவர், ஜம்புநாதபுரம் துணை மின் நிலைய உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார். இவர், வீட்டை பூட்டி விட்டு மைசூரில் உள்ள உறவினர் இல்ல துக்க நிகழ்ச்சிக்கு குடும்பத்துடன் சென்றிருந்தார். பின்னர், அங்கிருந்து ஊர் திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 6 பவுன் நகைகள், ரூ.10,000 ரொக்கம் ஆகியவை மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில், சமயபுரம் டோல்கேட் போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Comments are closed.