Rock Fort Times
Online News

குடிநீர் கலங்கலாக வருவதாக பொதுமக்கள் புகார்: உடனடியாக களத்தில் இறங்கிய திருச்சி மாநகராட்சி மேயர்…!

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட ஒரு சில பகுதிகளில் குடிநீர் கலங்கலாக வருவதாக பொதுமக்கள் தரப்பில் புகார்கள் அளிக்கப்பட்டன. அதன்பேரில், மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் உடனடியாக களத்தில் இறங்கினார். பொறியாளர்களுடன் அய்யாளம்மன் படித்துறையில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், அண்ணா நகர் உழவர் சந்தையில் அமைந்துள்ள மேல் நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் குடிநீர் திறக்கும் வாழ்வு பகுதிகளில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அவர் கூறுகையில், மாநகரில் உள்ள அனைத்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் , தண்ணீர் ஏற்றக்கூடிய குடிநீர் வாழ்வு தொட்டிகளை 15 நாட்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்யவும், தினந்தோறும் வார்டு மற்றும் தெருப் பகுதிகளில் தண்ணீர் வரும்போது அதனை ஆய்வு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேபோல, பாதாள சாக்கடை பணிகள் நடைபெறும் இடங்களில் தினந்தோறும் குடிநீர் குழாய்களை ஆய்வு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். இந்த ஆய்வின்போது செயற்பொறியாளர் கே.எஸ். பாலசுப்பிரமணியன், இளநிலை பொறியாளர் சரவணன், பிரசாந்த் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், பணியாளர்கள் உடன் இருந்தனர்.

ரூ.4 கோடி மதிப்பில் புதிய கார் வாங்கிய அஜித்!

1 of 842

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்