பொதுவாக ஆன்லைன் மூலம் பணப்பரிமாற்றம் அல்லது பொருட்கள் வாங்கும்போது பயனர்களுக்கு வரும் ஸ்க்ராட்ச் கார்டு நமது அதிர்ஷ்டத்தை தெரிந்துகொள்ளும் வகையில் அமைவது வழக்கம். ஆனால், இந்த ஸ்க்ராட்ச் கார்டையும் மோசடி கும்பல் விட்டு வைக்கவில்லை. இதற்கு உதாரணமாக ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்கிய பெங்களூருவைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு வந்த ஸ்க்ராட்ச் கார்டை திறந்து பார்த்ததன் விளைவாக, அவர் ரூ. 18 லட்சத்தை இழந்துள்ளார். அதாவது, அந்தப் பெண் , ஓபன் செய்த ஸ்க்ராட்ச் கார்டில் நீங்கள் ரூ.15.51 லட்சம் வென்றிருக்கிறீர்கள் என்று சந்தோஷ தகவலுடன் ஒரு செல்போன் எண்ணும் இணைக்கப்பட்டிருந்தது. அதில், கூறப்பட்டிருந்த தகவல்படி அப்பெண்ணும் அந்த எண்ணை தொடர்பு கொண்டுள்ளார். அடுத்தமுனையில் பேசியவர், அப்பெண்ணின் அடையாள அட்டை உள்ளிட்ட விவரங்களை கேட்டிருக்கிறார். அதன்படி, இவரும் தனது சுய விவரங்களை தெரிவித்திருக்கிறார். அந்தப் பெண்
கர்நாடகத்தை சேர்ந்தவர் என்பதால், அங்கு இதுபோன்ற பரிசுகளுக்கு 4 சதவீத வரி செலுத்த வேண்டும் என்று கூறி படிப்படியாக அவரிடமிருந்து ரூ.18 லட்சம் வரை ஏமாற்றி பெற்றிருக்கிறது மோசடி கும்பல். ஆனால், அவருக்கு எவ்வித பரிசுத்தொகையும் அனுப்பப்படவில்லை.கொடுத்த பணமும் திருப்பி தரப்படவில்லை.
இதனால், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அந்தப் பெண் போலீசில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.