திருச்செந்தூரில் இருந்து சென்னை நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் பஸ் நிறுத்தம் அருகே உள்ள பெறுவளை வாய்க்கால் அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக அங்குள்ள பாலத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த 6 வயது சிறுவன், 2 ஆண்கள் , 2 பெண்கள் உட்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அருகில் உள்ளவர்கள் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. உயிரிழந்தவர் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கார் மீது அந்த வழியாக சென்ற ஒரு பஸ் உரசியதால் கார் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் மோதியதாக கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து சமயபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Post

Comments are closed, but trackbacks and pingbacks are open.