Rock Fort Times
Online News

பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்கு பதிவு செய்ய அனுமதி அளிக்கவில்லை- ஆளுநர் மாளிகை விளக்கம்…!

அறிஞர் அண்ணாவை பற்றி அவதூறாக பேசிய புகாரில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்ய ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளதாக ஊடகங்களில் செய்தி பரவி வருகிறது. இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய அனுமதி அளித்துள்ளதாக ஊடகங்களில் பரவி வரும் செய்தி உண்மைக்கு புறம்பானது .

அது தொடர்பான அனுமதி எதுவும் பிறப்பிக்கவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்