Rock Fort Times
Online News

பெண்ணை ஆபாசமாக திட்டி ரகளை செய்த வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது…!

திருச்சி கீழ வண்ணாரப் பேட்டையை சேர்ந்தவர் ரவுடி வெங்கி என்ற வெங்கடேசன். இவர் கடந்த மே 2-ம் தேதி சீனிவாச நகரை சேர்ந்த பெண் ஒருவரின் வீட்டுக்கு சென்று ஆபாசமாக திட்டி, அவரது வீடு மற்றும் டூவீலரை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்தப் பெண் அளித்த புகாரின்பேரில், அரசு மருத்துவமனை போலீசார் வழக்கு பதிந்து வெங்கியை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தொடர்ந்து வெங்கி குறித்து போலீசார் நடத்திய மேல் விசாரணையில், அவர் மீது 5 வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது. ரவுடி வெங்கியின் தொடர் குற்ற நடவடிக்கைகளை தடுக்கும் பொருட்டு அரசு மருத்துவமனை இன்ஸ்பெக்டர், மாநகர போலீஸ் கமிஷனருக்கு அறிக்கை தாக்கல் செய்தார். அறிக்கையை ஆய்வு செய்த மாநகர போலீஸ் கமிஷனர் காமினி, ரவுடி வெங்கி மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து வெங்கி மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் அதற்கான ஆணையை திருச்சி மத்திய சிறையிலுள்ள வெங்கியிடம் வழங்கினர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்