மறைந்த தொழிலதிபர் கே.என். ராமஜெயம் பிறந்த நாள்: சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு…!
திருச்சியின் பிரபல தொழிலதிபரும், திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேருவின் சகோதரருமான மறைந்த கே.என்.ராமஜெயத்தின் பிறந்தநாள் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 22ம்தேதி பிரம்மாண்டமாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, இன்று(22-09-2026) திருச்சி, திண்டுக்கல் ரோடு பிராட்டியூரில் உள்ள கேர் கல்லூரி வளாகத்தில் உள்ள அன்னாரது முழுஉருவ வெண்கல சிலைக்கு திருச்சி மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.என்.நேரு தலைமையிலான திருச்சி மாவட்ட திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்வில் லால்குடி நகராட்சி தலைவர் துரை.மாணிக்கம், குடமுருட்டி சேகர், மாநகராட்சி துணை மேயர் திவ்யா தனக்கோடி, திருச்சி தெற்கு மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் என்.செந்தமிழ் செல்வன், முசிறி கருணை ராஜா, லால்குடி பாரிவள்ளல், மலைக்கோட்டை பகுதி இளைஞரணி துணை அமைப்பாளர் மயில் குணா ராஜபாண்டி, 13 வது வார்டு கவுன்சிலர் மணிமேகலை ராஜபாண்டி, திருச்சி மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் பெருவை இன்ஜினியர் எஸ்.முருகவேல், திருச்சி மாவட்ட திமுக பிரமுகர்கள் புத்தூர் தர்மராஜ், ஜான்சன் குமார், மண்ணச்சநல்லூர் மத்திய ஒன்றிய திமுக செயலாளர் டிஎஸ்பி சீனிவாச பெருமாள் உள்ளிட்ட மாவட்ட,ஒன்றிய, மாநகர, பகுதி, வார்டு, கிளைக் கழக செயலாளர்களும், சார்பு அணி பொறுப்பாளர்களும், கட்சித் தொண்டர்கள் என திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

Comments are closed.