Rock Fort Times
Online News

ரேஷன் கடைகளில் பருப்பு, பாமாயில் கிடைக்கவில்லையா?- ஜூன் முதல் வாரத்தில் வாங்கிக் கொள்ளலாம்…!

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் இம்மாதம் பல பேருக்கு பாமாயில், மற்றும் துவரம் பருப்பு கிடைக்கவில்லை என தமிழக அரசுக்கு புகார்கள் சென்றன.
இதுகுறித்து உணவுப் பொருள்கள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், “தமிழ்நாடு அரசு, சிறப்புப் பொது விநியோகத் திட்டத்தின் வாயிலாக 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம்தோறும் தலா ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.30க்கும், ஒரு லிட்டர் பாமாயில் ரூ.25க்கும் மானிய விலையில் வழங்கி வருகிறது. மக்களவைத் தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக பாமாயில் மற்றும் துவரம் பருப்புக்கான ஒப்பந்தப்புள்ளிகள் மீதான முடிவுகள் மேற்கொண்டு அதனை கொள்முதல் செய்வதில் காலதாமதம் நேரிட்டது. அந்தப் பொருட்களை கொள்முதல் செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
ஆகவே, இம்மாதம் துவரம் பருப்பு, பாமாயில் கிடைக்க பெறாதவர்கள் ஜுன் மாதம் முதல் வாரம் வரை பெற்றுக் கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சியில் "திக்... திக்... நிமிடங்கள்” - பாதுகாப்பாக தரையிறங்கிய விமானம்!

1 of 874

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்