ஆண்களுக்கு நிகராக பெண்களும் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருகிறார்கள். பெரும்பாலும் பாம்பு பிடிப்பது போன்ற காரியங்களில் ஆண்களே பெரும்பாலும் ஈடுபடுவர். ஆனால் ஒரு பெண் துணிச்சலாக ஒரு பாம்பை பிடித்து அதனை வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். அந்தவகையில் கடந்த சில நாட்களுக்கு முன் கோவை புலியகுளம் பகுதியில் 8 அடி நீளம் உள்ள சாரைப்பாம்பு ஒன்று சுற்றித் திரிவதாக கிடைக்கபெற்ற தகவலின்பேரில் அப்பகுதியை சேர்ந்த தன்னார்வ அமைப்பினரான அப்துல் ரஹ்மான் மற்றும் சின்னவேடம்பட்டியை சேர்ந்த உமா ஆகியோர் அந்த பாம்பை பிடித்து கோவை வனச்சரக அலுவலர்களிடம் ஒப்படைத்தனர். முன்னதாக அந்த பாம்பை பிடித்தபோது சாரை பாம்புகள் விஷமற்றவை, அவற்றால் மனிதர்களுக்கு எவ்வித தீங்கும் ஏற்படாது. பாம்புகள் விவசாயிகளின் நண்பன் என்று பேசி சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டார்.
அது வைரலான நிலையில், அவருக்கு ஒருபுறம் ஆதரவும், மறுபுறம் எதிர்ப்பும் கிளம்பியது . இந்நிலையில் பாம்பை பிடித்து வீடியோ எடுத்து அதனை சமூக வலைதளங்களில் பரவ விட்ட அப்துல் ரஹ்மான் மற்றும் உமா மீது வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வனத்துறையினர் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்து நீதிமன்ற நடுவர் முன் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர்கள் இருவரும் சொந்த ஜாமீனில் விடுவிக்கபட்டனர்.
Comments are closed.