தமிழகத்தில் 36 அரசு மருத்துவ கல்லூரிகள், 21 தனியார் மருத்துவ கல்லூரிகள், 3 அரசு பல் மருத்துவ கல்லூரிகள், 20 தனியார் பல் மருத்துவ கல்லூரிகள், சென்னை கே.கே.நகரில் இஎஸ்ஐ மருத்துவ கல்லூரி ஆகியவை உள்ளன. இந்தநிலையில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் தனியார் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான கலந்தாய்வு விண்ணப்பப்பதிவு ஆன்லைன் மூலம் இன்று(31-07-2024) காலை 10 மணிக்கு தொடங்குகிறது. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் https://tnmedicalselection.net https://tnhealth.tn.gov.in என்ற இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவ கல்வி, ஆராய்ச்சி இயக்ககம் தெரிவித்துள்ளது. விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் வருகிற 8-ம் தேதி (வியாழக்கிழமை) என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பப்பதிவு நிறைவு பெற்றதும், கலந்தாய்வு தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed.