Rock Fort Times
Online News

வணிகர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள புதிய வரியை ரத்து செய்யக்கோரி கோவிந்தராஜுலு தலைமையில் மாநகராட்சி ஆணையரிடம் மனு…!

திருச்சி எலக்ட்ரிக், எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் பைப் ட்ரேடர்ஸ் வெல்பர் அசோசியேசன் சார்பாக, புதிதாக வணிக உரிமம் என்ற பெயரில் வணிகர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன புது வரியை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு தலைமையில் திருச்சி மாநகராட்சி ஆணையர் சரவணனிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.  அப்போது சங்கத் தலைவர் குணா, பொதுச் செயலாளர் வேல்முருகன் மற்றும் 100க்கு மேற்பட்ட வணிகர்கள் உடன் இருந்தனர்.  அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு  வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- புதிதாக வணிகவரி அறிவித்துள்ளனர்.  ஏற்கனவே, ஜிஎஸ்டி வரி, கடை வாடகை, சொத்து வரி, குடிநீர் வரி, பாதாள சாக்கடை வரி, தொழில் வரி, தொழிலாளர் நலன் சம்பந்தப்பட்ட வரி, மின் கட்டண உயர்வு போன்ற பல்வேறு வரி உயர்வு காரணமாக தொழில் நலிவடைந்து உள்ளது.  இந்நிலையில், வணிக உரிமம் என்ற புதிய வரி மேலும் தொழிலை பாதிக்கும். அதிகாரிகள், வியாபாரிகளிடம் கடுமையாக நடந்து கொள்கின்றனர்.  தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை வணிகர்கள் தற்போது பயன்படுத்துவதில்லை.  ஆனால், தமிழக அரசால் அறிவுறுத்தப்பட்ட பைகளையும் பிளாஸ்டிக் வியாபாரிகளிடமிருந்து அதிகாரிகள் பறிமுதல் செய்கின்றனர்.  இதனால், வியாபாரிகளுக்கு பெருத்த நஷ்டமும், மன உளைச்சலும் ஏற்படுகிறது.  இதுகுறித்து மாநகராட்சி ஆணையரிடம் கூறியுள்ளோம். தொழில் வரி மற்றும் லைசன்ஸ் ஆகியவற்றை எளிய முறையில் மாற்றி அமைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து தருவதாக ஆணையர் உறுதி அளித்துள்ளார்.

தரைக்  கடைகளுக்கு தனியாக இடம்  ஒதுக்கப்பட்டு திருச்சி மாநகராட்சி  பகுதிகளில் எங்கெல்லாம்  தரைக் கடைகள் அமைக்கலாம்  என அறிவுறுத்தி  உள்ளோம். இதற்கு  ஒரு நல்ல தீர்வை மாநகராட்சி  அதிகாரிகள் செய்வார்கள் என்ற  நம்பிக்கை உள்ளது.  காந்தி மார்க்கெட் நிச்சயமாக  அதே இடத்தில் செயல்படும். சில்லறை வியாபாரம் தொடர்ந்து நடைபெறும்.  கனரக வாகனங்கள், பெரிய வாகனங்கள் மட்டும் பஞ்சப்பூருக்கு  மாற்றுவது குறித்து அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.  காந்தி மார்க்கெட்டை மாற்றக்கூடாது என முதல்வர், அமைச்சர்களிடம் மனு அளித்துள்ளோம் என தெரிவித்தார். பேட்டியின்போது, மண்டல தலைவர் தமிழ்ச்செல்வம், மாவட்டத் தலைவர் ஸ்ரீதர், மாவட்டச் செயலாளர் செந்தில் பாலு, பொருளாளரும், வெங்காய தரகு வர்த்தக மண்டி சங்க செயலாளருமான தங்கராஜ், மாநகரத் தலைவர் எஸ்.ஆர்.வி.கண்ணன், பொருளாளர் ஜானகிராமன், மாநிலத் துணைத் தலைவர்  ரங்கநாதன், மாவட்ட இளைஞரணி தலைவர் ஏ.எம்.பி.அப்துல் ஹக்கீம், மாநகர இளைஞரணி தலைவர் கே.எம்.எஸ்.மைதீன், மாநில இணைச்செயலாளர் அப்பாய் குமரன், வெங்காய தரகு மண்டி வர்த்தக சங்க தலைவர் வெள்ளையப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்