அரசு முறை பயணமாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திருச்சி வருகை: முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு…!
திருச்சி மற்றும் துறையூர், திருவெறும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் 2 நாட்கள் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருச்சிக்கு வருகை தர உள்ளார். இதனைத் தொடர்ந்து திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம் பச்சமலையில் நாளை (01-08-2024) அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்ளும் அரசு விழாவிற்கான முன்னேற்பாடு பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பார்வையிட்டு ஆய்வு செய்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.இந்த ஆய்வின்போது திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் காடுவெட்டி தியாகராஜன், கதிரவன், ஸ்டாலின் குமார், மேயர் அன்பழகன், மாவட்ட வன அலுவலர் கிருத்திகா, மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, ஊராட்சி குழு தலைவர் தர்மன் ராஜேந்திரன், திட்ட இயக்குனர் தேவநாதன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
Comments are closed.