தமிழக ஆளுநருடன் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் சந்திப்பு- கள்ளச்சாராய விவகாரம் குறித்து முறையீடு…!
கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் கிராமத்தில் கள்ளச்சாராயம் குடித்த 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிலர் கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. தமிழகத்தையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஒருநபர் ஆணையமும் அமைக்கப்பட்டு இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தமிழக சட்டசபையிலும் இந்த பிரச்சனை எதிரொலித்து வருகிறது.
இந்தநிலையில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் தொடர்பாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை எதிர்க்கட்சித்தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 61 பேரும், எம்.பி.க்கள் 3 பேர் சந்தித்தனர். அப்போது அவர்கள் கள்ளச்சாராய விவகாரம் குறித்து முறையிட்டதோடு சிபிஐ விசாரணை கோரி மனு அளித்தனர்.
Comments are closed.