காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மாவட்ட நாடார் மகாஜன சங்கம் சார்பில் மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி…!
பெருந்தலைவர் காமராஜர் 122-வது பிறந்த தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி, தினத்தந்தி, வடமலையான் மருத்துவமனை சார்பில் பள்ளி மானவர்களுக்கான பேச்சுப்போட்டியை தேவர் ஹாலில் திருச்சி மாவட்ட நாடார் மகாஜன சங்க நிர்வாகிகள் நடத்தினர். இதில், ஏராளமான பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நாடார் மகாஜன சங்க பொதுச்செயலாளர் கரிக்கோல்ராஜ் சான்றிதழும், பரிசும் வழங்கினார். நிகழ்ச்சியில் பேராசிரியர் மணி பிரகஸ்பதி, வழக்கறிஞர் சிவா, அய்யனார் மெட்டல் ஆறுமுகம், ரெங்கநாயகி பட்டாணி கடை உரிமையாளர் சரவணன், மண்டல செயலாளர் ஏ.டி.முருகேஷ் பாண்டியன், நாடார் உறவின்முறை சங்க பொதுச் செயலாளர் சண்முகதுரை மற்றும் திருச்சி நாடார் உறவின் முறை சங்கம், நெல்லை நாடார் உறவின் முறை சங்கம், காட்டூர் நாடார் உறவின் முறை சங்கம், ஸ்ரீரங்கம் நாடார் உறவின் முறை சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில், மாவட்ட செயலாளர் போஸ் செல்வக்குமார் நன்றி கூறினார். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் ஜூலை மாதம் 15 ம் தேதி விருதுநகரில் நடைபெறும் இறுதிப் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.
Comments are closed.