அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தஞ்சை மாவட்டத்தில் நாளை ( 19-06-2024) பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இதில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் நாளை காலை 6.50 மணிக்கு திருச்சி வருகிறார். அவருக்கு திருச்சி விமான நிலையத்தில் திருச்சி மாநகர், திருச்சி புறநகர் தெற்கு, திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. நிகழ்ச்சிகள் முடிந்து சென்னை செல்வதற்காக மாலை 6 மணி அளவில் மீண்டும் திருச்சி விமான நிலையம் வருகை தர உள்ளார். இந்த இரு நிகழ்வுகளிலும் திருச்சி மாநகர், திருச்சி புறநகர் தெற்கு, திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து நிலைகளில் உள்ள நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டுமென மாவட்ட செயலாளர்கள் ப.குமார், ஜெ.சீனிவாசன், மு.பரஞ்சோதி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளனர்.
Comments are closed.